அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
புதிதாக பறித்த பழங்களை விட, உலர்ந்த அத்திப்பழத்தில் அதிக அளவிலான தாதுச்சத்துக்களும், வைட்டமின்களும் இருக்கிறது..
நாட்டு அத்தி, மற்றும் சீமை அத்திப்பழம் என இருவகை உண்டு. இதில் லேசான இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை இருக்கும்.
வாரத்தில் குறைந்தது 2-3 முறையாவது அத்திப் பழம் சாப்பிடுவதால், சிறுநீர்ப் பையில் கல், மூலநோய், வாய்துர்நாற்றம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படும்
அத்திப்பழத்தில் உள்ள அதிக அளவு வைட்டமின் பி6 செரோடோனின் அளவை உயர்த்துகிறது. இது கொழுப்பைக் குறைக்கும் மற்றும் மனநிலையை மேம்படுத்தும்.
அத்திப்பழம் தூக்கமின்மைக்கு உதவும். அவற்றில் டிரிப்டோபான் என்ற சத்து உள்ளது. இது நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் சர்க்கரையை சரியாகப் பயன்படுத்த மூளைக்கு உதவுகிறது.
இதில் அதிகப்படியான இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் சி, ஏ, கே, ஈ, கே இருப்பதால், உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் சுழற்சியை தரும்.
உடலில் பித்தம் அதிகம் உள்ளவர்கள், தினமும் அத்திப்பழத்தை சாப்பிட்டுவந்தால் கடும் பித்தம் வியர்வை வழியாக வெளியாகிவிடும்.
உடல் எடை அதிகரிக்க விரும்புவோர், தினமும் 2 அத்திப்பழத்தை சாப்பிட்டால், இரத்த உற்பத்தி அதிகரித்து, தேவையான உடல் வளர்ச்சியையும் தரும்.
இரவில் 3-5 பழம் வரை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீருடன் இப்பழத்தையும் சாப்பிட்டுவர, உடலில் புதிய இரத்தத்தை உற்பத்திசெய்து, இரத்த சோகையை முற்றிலும் குணமாகிவிடும்.
எலும்புகளை வலுப்படுத்த தேவையான கால்சியம் பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் வைட்டமின் கே இருப்பதால், எலும்புகளின் அடர்த்தி தன்மை அதிகமாக்கி, மூட்டு வலி, முதுகு வலி, என எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு உண்டாகும்.
உடலில் சீரான இரத்த அழுத்தம் இருக்க தேவையான பொட்டாசியம் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரித்து, இரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தை குறைக்கிறது.
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2-3 பழங்கள் சாப்பிட்டுவரலாம். 2-3 பழங்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம், அல்லது காய்ந்த அத்திப்பழத்தை நேரடியாக சாப்பிடலாம்.
அத்திப்பழம், இனிமையான சுவையுடன் கூடிய ஒரு பழம் மட்டுமல்ல, பல சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு . இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
அத்திப்பழத்தின் நன்மைகள்:
- அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கலை தடுக்கிறது.
- அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
- கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால், எலும்புகளை வலுப்படுத்தி, ஆஸ்டியோபோரோசிஸ் நோயைத் தடுக்கிறது.
- அத்திப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.
- அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை பொலிவாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
- அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசியைத் தணிக்கிறது, இதனால் அதிகமாக உண்பதை தவிர்க்க உதவுகிறது.
அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
- நார்ச்சத்து
- கால்சியம்
- பொட்டாசியம்
- பாஸ்பரஸ்
- மெக்னீசியம்
- வைட்டமின் ஏ
- வைட்டமின் பி
- இரும்பு
அத்திப்பழத்தை எப்படி சாப்பிடுவது:
- பச்சையாக சாப்பிடலாம்.
- உலர்ந்த அத்திப்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.
- அத்திப்பழத்தை கொண்டு பழச்சாலைகள், ஜாம், மிட்டாய் போன்றவற்றை தயாரிக்கலாம்.
- அத்திப்பழத்தை சாலட்களில் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு:
- அத்திப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
- சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.
அத்திப்பழம் சிறிய பழமாக இருந்தாலும், அதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, உங்கள் தினசரி உணவில் அத்திப்பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment