/* ===== Custom Header + Mobile Responsive for Watermark ===== */ #header-inner { text-align: center !important; padding: 10px 0 !important; } #header h1, #header h1 a { font-size: 32px !important; color: #004080 !important; text-decoration: none !important; font-weight: bold !important; } #header .description { font-size: 16px !important; color: #333333 !important; font-style: italic !important; } /* Mobile view */ @media only screen and (max-width: 600px) { #header h1, #header h1 a { font-size: 22px !important; } #header .description { font-size: 14px !important; } .post { background: #ffffff !important; margin: 10px 5px !important; padding: 10px !important; border-radius: 8px !important; } img { max-width: 100% !important; height: auto !important; } }
Showing posts with label பலதும் பத்தும். Show all posts
Showing posts with label பலதும் பத்தும். Show all posts

Sunday, 5 October 2025

வீணாகிறதே என்று சாப்பிட்டால் வீணாகிவிடும் நம் உடம்பு !!

 



பொதுவாக, வீட்டில் மீதமாகும் உணவுகளை எல்லாம் ‘அய்யோ.. காசு போட்டு வாங்கி, கஷ்டப்பட்டு சமைச்சு, எல்லாம் வீணாப்போகுதே..’ என்பதற்காகவே சாப்பிடும் பெண்கள் இங்கு பலர். ‘‘அப்படி வீட்டினர் வீணாக்கும் உணவுகளை, வீணாக்காமல் சாப்பிடுவதாக எண்ணி தேவைக்கும் அதிகமாகச் சாப்பிடுவதால் அது உங்கள் உடம்புக்குச் செய்யும் கெடுதல்கள் பல!’’ .

ஊட்டச்சத்து அதிகமானால்.. ஊளைச்சதை!

‘‘ஊட்டச்சத்துகளை பொதுவாக மைக்ரோ மற்றும் மேக்ரோ என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில் எந்த வகையை அதிகமாக உட்கொண்டாலும், பக்கவிளைவுகள் பரிசாகக் கிடைக்கும்.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை மேக்ரோ ஊட்டச்சத்துகள். வீட்டில் மீதமாகும் உணவுகளில் முதல் இடம் பிடிப்பது, சாதம் மற்றும் அரிசி சார்ந்த உணவுகள்தான்.

கார்போஹைட்ரேட் உணவுகளான இவற்றை தேவைக்கும் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், உடலின் தேவைக்கும் அதிகமான கார்போஹைட்ரேட் கொழுப்பாக உடலில் சேர்ந்துக்கொண்டே இருக்கும். இன்னொருபுறம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகமாகிக்கொண்டே போய் சர்க்கரை நோயில் முடியும்.

ஒரு நாளில் கல்லீரலில் 400 கிராம் வரைதான் கார்போஹைட்ரேட் சேர வேண்டும். அதற்கும் அதிகமாக சேரும்போது அது கொழுப்பாக மாறி, `ஒபிசிட்டி’யை ஏற்படுத்தும். இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

ஃப்ரிட்ஜில் உணவுகள் கொண்டுவரும் பிரச்னைகள்!

ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைச் சாப்பிடுவது மிகவும் தவறு. ஜில் உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும்போது, அதிலுள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துகள் வெளியேறிவிடும். மேலும், ஏதாவது ஒரு சத்து மட்டும் அதிகளவு கூடிவிடும். இப்படியான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது ஒபிசிட்டி, இதயநோய் என்று விளைவுகள் தீவிரமாக இருக்கும்.

காரக் குழம்பு வகைகளை மீண்டும் மீண்டும் சூடுசெய்து சாப்பிடும்போது அதில் இருக்கும் சோடியம் அளவு அதிகமாகி, ரத்தக்கொதிப்பை வரவழைக்கும்.

அசைவ உணவு வகைகளைச் சூடுசெய்து சாப்பிடும்போது, அதில் இருக்கும் கொழுப்புகள் எல்லாம் கெட்ட கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து உடற்பருமனுக்கு வழிவகுக்கும்.

பழங்களும் அளவாகவே..!

மைக்ரோ ஊட்டச்சத்து வகையில் விட்டமின் `ஏ’, `சி’, `இ’, `டி’, இரும்புச் சத்து போன்றவை அடங்கும். இந்தச் சத்துகள் எல்லாம் பழங்கள், கீரை வகைகள், தயிர், காய்கறிகள் போன்றவற்றில் அதிகம் உள்ளன. குழந்தை சாப்பிடவில்லை, மீதமாகிவிட்டது என ஏதோ ஒரு காரணத்தால் தேவையான அளவுக்கும் ‘எக்ஸ்ட்ரா’வாக இவற்றைச் சாப்பிடுவது அன்றாடம்தான்.

இவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது வாந்தி, மயங்கம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு தலைவலி, ஓய்வின்மை, பதற்றம் போன்ற உடனடிக் கோளாறுகளை உடலில் உண்டு பண்ணும். மைக்ரோ சத்துக்களை சமமாகச் சாப்பிடும் போதுதான், உடலில் மெட்டபாலிஸம் சரியாக இருக்கும்.

தொடர்ந்து ஒரே வகை பழம், காய் என்று அதிகளவில் சாப்பிடும்போது, இவற்றில் ஏதாவது ஒரு சத்து மட்டும் அதிகமானால், உடலில் மற்ற சத்துகளை வேலை செய்ய விடாமலும், புதிதாக ஒரு பிரச்னையையும் உண்டுபண்ணி, ஒரு குறைபாடாக மாற்றிவிடும்.

உதாரணமாக, கால்சியம் சத்தை உடல் கிரகிக்க விட்டமின் `டி’ தேவை. ஆனால், கால்சியம் மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கால்சியமானது... விட்டமின் `டி’ தேவையை உடலில் ஈடுசெய்ய விடாது, அந்த நேரம் கால்சியமும் உடலில் தங்காது. இது புதிதாக ஒரு பிரச்னையை உண்டுபண்ணி, கால்சியம் குறைபாடாக மாற்றிவிடும்.நீர்ச்சத்து உணவுகளை அதிகளவு சாப்பிடும் போது அவை உடலில் தங்காமல், சிறுநீர் மூலம் வெளியேறிவிடும். எனினும், சிறுநீரகத்துக்கு அது அதிகப்படியான வேலையாக இருக்கும் என்பதால், தவிர்க்க வேண்டும்.

மனதளவிலும் பிரச்னைகள்..!

உடற்செயல்பாட்டுப் பிரச்னைகள் தவிரவும், மனதளவில் இது ஏற்படுத்தும் பிரச்னைகள் பல. உணவு வீணாவது பற்றிய கவலை முதலில் மனதை சோர்வுற வைக்கும். வீணாக்காமல் அதைச் சாப்பிட்ட பிறகு, தேவைக்கும் அதிகமாக உள்ளே தள்ளியதைப் பற்றிய எண்ணமும் உறுத்திக் கொண்டே இருக்கும்.

இதெல்லாம் மனரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்தும். அதேபோல, குடும்பம், குழந்தை, வேலைச்சுமை போன்ற காரணங்களால் பசிக்கும் நேரத்தில் சாப்பிடாமல் இருந்துவிட்டு, பசி அடங்கிய பிறகு வலுக்கட்டாயமாக சாப்பிடுவதும் கெடுதல்களையே தரும்.

இதற்கெல்லாம் சிம்பிள் தீர்வு..

வீணாகாத அளவுக்கு திட்டமிட்டுச் சமைப்பது. அப்படியே எதிர்பாராத காரணங்களால் உணவு மிகுந்து போனாலும், வீட்டில் வேலை பார்க்கும் பெண், தெருமுனையில் அமர்ந்திருக்கும் ஆதரவற்ற முதியவர் என்று தேவை இருப்பவர்களுக்கு அதைக் கொடுங்கள். அல்லது அதை எந்த மனச் சலனமும் இல்லாமல் குப்பையில் கொட்டுங்கள். ஏனெனில், வீணாகும் உணவைவிட, உங்கள் ஆரோக்கியம் முக்கியம். கிச்சனில் வேஸ்ட்டாவதைப் பற்றிக் கவலைப்பட்டு, மருத்துவச் செலவுகளை இழுத்துக் கொள்ளாதீர்கள்!’’.

*நிலக்கடலை*

 






*டாக்டர்களின் எதிரி*
*நிலக்கடலை* 
*சக்கரையை கொல்லும்*
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

*நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

உணர்வு சார் விடயங்களில் AIயின் ஆலோசனை – சரியா? பிழையா?

 பணி சார்ந்து AI செயலிகளை பயன்படுத்தி வந்த இளம் தலைமுறையினர் தற்போது தங்களின் தனிப்பட்ட உளவியல் பிரச்சினைகளுக்கும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஆனால், இது பலனளிக்குமா? அல்லது ஆபத்தில் முடியுமா? மனநலன், உறவுகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு AIயின் உதவி பெறுவது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

AIயின் வளர்ச்சிக்குப் பின்னர் பெரும்பாலானோர் தங்கள் அன்றாட வாழ்வில் AIஐ பயன்படுத்தி வருகின்றனர். அதில், உளவியல் தொடர்பான பயன்பாடும் அடங்குகிறது.

பெரும்பாலும் உடனடித் தீர்வைத் தேடியே AI செயலிகளை இளைஞர்கள் நாடுகின்றனர் என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மனநல ஆய்வாளர்கள் கூறும்போது, இளைஞர்கள் பெரும்பாலும், நேர மேலாண்மை, காதல் பிரச்னைகள், வேலையில் கவனக்குறைவு போன்ற காரணங்களுக்காக AIசெயலிகளை பயன்படுத்துகின்றனர். சில சமயங்களில் அது உண்மையில் உதவியாகவும் இருக்கும் என்கின்றனர்.

அவ்வாறு AI யின் உதவியை நாட காரணம் என்ன?

உலகம் இணையத்தால் இணைந்திருந்தாலும், தனிமை இன்னும் ஒரு பெரிய பிரச்னையாகவே உள்ளது.

ஆனாலும் இளைஞர்கள் AIயை நாடுவதற்கு காரணம் தனிமை மட்டும் அல்ல.

அது உடனடியாக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. அதனால் AIயை பயன்படுத்துபவர்கள் அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

இங்கு கட்டணமும் ஒரு முக்கிய விஷயமாக உள்ளது. நாம் ஏதேனும் ஒருவிடயத்தினை தெரிந்துகொள்ளவோ, அல்லது நமது பிரச்சினைக்கு உளவள ஆலோசனை பெறவோ துறை சார்ந்தவர்களை அணுகுவதற்கு கட்டணம் தேவைப்படுகிறது. ஆனால் AIயிடம் ஆலோசனை பெற கட்டணம் தேவையில்லை.

ஆறுதலாக பேசுவது, நாம் செய்வதை சரி என கூறுவது நமக்கு எப்போதும் பிடித்தமானதாக இருக்கும் அல்லவா? பெரும்பாலனவர்கள் AIயை நாடுவதற்கும் இது ஒரு காரணமாக உள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

AIசெயலிகள் எப்போதும் உங்கள் உணர்ச்சிகளை சரி என்றே கூறும். ஆனால் மனநல ஆலோசகர் உங்களது சிந்தனைகளை சவாலுக்குள்ளாக்கி, புதிய கோணத்தில் அணுக கற்றுக் கொடுப்பர்.

எனவே உணர்வு சார்ந்த விடயங்களிலோ, மனநலன், உறவுகள் சார்ந்த விடயங்களிலோ AIயின் ஆலோசனை பெறுவது பொருத்தமானதாக அமையாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


முஸ்லிம்கள் ஏன் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை தெரியுமா?

 நீங்கள் ஏன் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை என்று ஒரு முஸ்லீமிடம் ஒரு ஜெர்மனியர் கேட்டார்.

மதம் சார்ந்தது அல்லாமல் அறிவியல் சார்ந்த ஒரு காரணத்தைக் கூறுங்கள், உங்களுடைய பதில் உறுதியானதாக இருக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டார்!

'எனக்கு ஒரு மணி நேரம் கொடுங்கள், நான் உங்களுக்கு ஜெர்மன் மொழியில் பதிலைத் தருகிறேன், அதற்கான காரணத்தை அறிவியல் பூர்வமாக விளக்குகிறேன், இறைவன் நாடினால் என்று முஸ்லிம் நண்பர் கூறினார்.

பின்னர் அந்த இஸ்லாமிய நண்பர் இணையத்தில் தேடத் தொடங்கினார், பல ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் சர்வதேச அறிவியல் பக்கங்களை உலாவினார்.

ஓரளவிற்கு, அவர் ஒரு ஜெர்மன் தளத்தில் கிடைத்த அறிக்கையால் அதிர்ச்சியடைந்தார்.

இந்த ஆதாரம் ஜெர்மன் உணவு தர ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் அறிக்கை பன்றி இறைச்சியைப் பற்றிய பல உண்மைகளை எழுதுகிறது:

பன்றி இறந்த சடலத்தை, அது எந்த பிராணியாக, சிதைந்திருந்தாலும், அது தனது தந்தையாக இருந்தாலும், அதைத் தின்னும்.

பன்றி கிட்டத்தட்ட எல்லாவற்றையும் சாப்பிடுகிறது: அது சிறுநீரையும் அதன் சொந்த சிறுநீரையும் கூட குடிக்கிறது, மற்ற விலங்குகளின் எச்சங்களையும் உண்ணும்., அழுக்கு படிந்து ஈரமாக இருந்தாலும், செத்து வீங்கிய உடலாக இருப்பினும் அது சாப்பிடும், பச்சை மற்றும் அழுகிய தாவரங்களையும் சாப்பிடும்.

ஆட்டுக்குட்டியை விட பன்றியின் உடலில் அதிக நச்சுகள் உள்ளன.

பன்றிக்கு வியர்க்கவே வியர்க்காது, ஏனென்றால் அதன் தோல் ஒரு பஞ்சு போன்றது, அது அனைத்து அழுக்குகளையும் உறிஞ்சிவிடும், மேலும் இது ஒரு பேரழிவு.

நீங்கள் ஆட்டிறைச்சியை உண்ணும்போது, ​​​​உங்கள் உடல் அதை ஜீரணிக்க 6 முதல் 9 மணி நேரம் ஆகும், இதில் கல்லீரல் ஒரு பெரிய நேரத்தில் மிகக் குறைந்த அளவு நச்சுகளை உறிஞ்சுகிறது, அதே நேரத்தில் பன்றி இறைச்சி ஜீரணமாக ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஆகும், இந்த நேரத்தில் உங்கள் கல்லீரல் நச்சுக்களில் நனைந்து மூடப்பட்டிருக்கும்..

* பன்றி எல்லா விலங்கினத்தையும் புணரும். தன் இன ஆணாக இருந்தாலும் உறவு கொள்ளும் நோய்களை சுமந்து செல்வதற்கு இது ஒரு பெரிய காரணம்.

பன்றியைக் கொன்று 3 மணி நேரம் கழித்துத்தான் அதன் உடலில் இருந்து சில கிருமிகள் வெளியேறும்.

பன்றியின் உடலில் சமைத்தாலும், கிரில் செய்தாலும் இறக்காத கிருமிகள் உள்ளன.

பன்றி இறைச்சி சமைக்க 6 மணி நேரத்திற்கும் மேலாகிறது, மேலும் இது வறுக்கவும் ஏற்றது அல்ல.

* பன்றியின் தலையில் அதிக அளவு ரத்தம் உறைந்துள்ளது, தலையை உயர்த்தாத ஒரே உயிரினம் இது..

* பன்றி தன் உணவை உண்பதற்கு முன் நுகராது, மாறாக அது சுத்தமாக இருந்தாலும் சாப்பிடும் போது தன் மூக்கிலிருந்து சளியை உணவின்மீது உமிழ்ந்துவிட்டு, பிறகு அதை உண்ணும்.

நமது நண்பர் அந்த அறிக்கையை படித்து முடித்ததும் அந்த ஜெர்மானியருக்கு அனுப்பி வைத்தார், ஜெர்மானியர் படித்ததும் பன்றி சாப்பிடுவதை உடனடியாக தவிர்த்தார்.மாறாக அனைத்து ஜெர்மன் பக்கங்களிலும் “Why Muslims Don’t eat pork" என்ற தலைப்பில் அந்த அறிக்கையை வெளியிட்டார்.

முஸ்லீம்களாகிய எங்களைப் பொறுத்தமட்டில், இறைவனுக்கே புகழனைத்தும், குரான் வாசகம் போதும்..இது எல்லாம் வல்ல இறைவனின் கூற்று (இறந்த உடல், இரத்தம், பன்றி இறைச்சி உங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது(அல்குர் ஆன்).


ஆலயதரிசனம்

 

வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம்,

முக்கியமான கோயிலுக்கு போயிட்டு வாங்க!

இளமை சீக்கிரம் போய்விடும்.

முதுமை சீக்கிரம் போகாது.

ஆசைப்பட்டாலும் கோயிலைப் பார்க்க முடியாது.

சொத்து சுகம் இருந்தாலும் சொந்த பந்தம் இருந்தாலும் முதுமையான காலத்துல யாரும் கோயிலுக்கு கூட்டிகிட்டு போக மாட்டாங்க.கடைசி காலத்தில் உயிர் இழுத்துகிட்டு சாவுற நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

யாராக இருந்தாலும் முதுமை கால வாழ்க்கை மிகவும் மோசமானது.கடைசி காலத்துல கட்டில்ல படுத்துகிட்டு பிள்ளைகளுக்கு சிரமத்தை கொடுக்கிற வாழ்க்கை நமக்கு வேண்டாம்.இளமையில் சாப்பிட்ட அத்தனையும் முதுமையில் சாப்பிட தோணும்.பணிவிடை செய்வதற்கு இன்று யாரும் தயாராக இல்லை.அசிங்கமா போயிடும் நம்ம நாற்றம் பிடித்த உடம்பை வைத்துக்கொண்டு மிகவும் கொடுமையான சித்திரவதையை அனுபவிக்க வேண்டும் இறுதி காலத்தில்.சிவசிவ என்று சொன்னாலே உயிர் போய் விட வேண்டும் சிவபெருமான் திருவடிக்கு .சேர்த்து வைத்த சொத்து சுகமெல்லாம் ஒரு பைசாவுக்கு உதவாது. உன்னுடைய பிள்ளைகளும் உனக்கு உதவ மாட்டார்கள். இளமை காலங்களில் சிவபெருமானை நேசி அவர் எதிர்காலத்தில் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார். இளமை காலம் முழுவதும் சிவபெருமான் திருவடியைத் கோயில் கோயிலாக தேடிச் சென்றால், இறுதி காலம் முழுவதும் சிவபெருமான் துணை இருப்பார்.

நமசிவாய வாழ்க.....

திருச்சிற்றம்பலம்.....